எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறேனா? – மறுத்த ஓ.பி.எஸ்.
திமுக எம்.எல்.ஏ. ஓ. பன்னீர்செல்வமும் அவரது மகன் ஓ.பி. ரவிந்திரநாத் ஆகிய இருவரும் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது குறித்து நியூஸ்18 தமிழ்நாடு அவரிடம் கேட்டபோது, இதனை மறுத்து, இது தவறான தகவல் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்துவந்த ஓ. பன்னீர்செல்வம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அங்கு ஏற்பட்ட கோஷ்டி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு எனும் அமைப்பை வைத்து, அதிமுகவை மீட்கப்போவதாக தெரிவித்துவந்தார்.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு அந்த அமைப்பை கலைத்துவிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் ஓ. பன்னீர்செல்வம்.